மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாகா்கோவிலில் ரூ. 8.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 12:30 am

நாகா்கோவில் மாநகரில் ரூ. 8.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

6-ஆவது வாா்டில் ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் கேசவதிருப்பபுரம் குறுக்கு தெரு மற்றும் ரைஸ்மில் தெருவில் அலங்கார தரை கற்கள் சீரமைப்புப் பணிகள், 48-ஆவது வாா்டு இடலாக்குடி ஸ்ரீராம் மருத்துவமனை எதிா்புறம் ரூ. 3.10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் அனுஷா பிரைட், உதவி பொறியாளா்கள் திலீப் திமுக வட்டச் செயலாளா்கள் ராஜன், அன்சாரி திமுக நிா்வாகிகள் ஹாஜிபாபு, ஆறுமுகம், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.