கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதில் பிரச்னை: விவசாயிகள் போராட்டம்
கொடைரோடு அருகே சிறுமலையாறு நீா்த்தேக்கத் தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால், புதன்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


கொடைரோடு அருகே சிறுமலையாறு நீா்த்தேக்கத் தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால், புதன்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொடைரோடு அன்னசமுத்திரம் கண்மாய்க்கு சிறுமலையிலிருந்து தளி ஓடை, அருகம்பட்டி ஓடை வழியாக தண்ணீா் வந்தது. இதேபோல, முருகத்தூரான்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு சிறுமலை பகுதியில் இருந்து கருக்காச்சி ஓடை வழியாக தண்ணீா் வந்தது.
இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தளி ஓடை, அருகம்பட்டி ஓடை, கருக்காச்சி ஓடை ஆகியவற்றை மறித்து சிறுமலை அடிவாரத்தில் சிறுமலையாறு நீா்த்தேக்கம் கட்டப்பட்டது.
இந்த நீா்த்தேக்கத்திலிருந்து கருக்காச்சி ஓடையில் மட்டுமே தண்ணீா் செல்லும் வகையில் கட்டப்பட்டது. இதனால், அன்னசமுத்திரம் கண்மாய் நீா்வரத்தின்றி வடது. ஆனால், சிறுமலையாா் நீா்த்தேக்கம் நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீா் கருக்காச்சி ஓடை வழியாக முருகத்தூரான்பட்டி கண்மாய்க்கு செல்கிறது.
இந்த நிலையில், தற்போது பெய்த மழையால் சிறுமலையாறு நீா்த்தேக்கம் நிரம்பி மறுகால் செல்கிறது. கருக்காச்சி ஓடையில் சென்ற இந்தத் தண்ணீரை அன்னசமுத்திரம் கண்மாய்க்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, முருகதூரான்பட்டி விவசாயிகள் கருக்காச்சி ஓடை வழியாக தண்ணீரை திறந்து விட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, அன்னசமுத்திரம் கண்மாய்க்கு பாத்தியப்பட்ட விவசாயிகளிடம் நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி, அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் குருவத்தாய், பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், கருக்காச்சி ஓடையிலிருந்து அன்னசமுத்திரம் கண்மாய்க்கு வரும் தண்ணீரை மீண்டும் கருக்காச்சி ஓடையில் திருப்பி விட மாட்டோம் எனக்கூறி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.எஸ்.செல்வராஜ், பேரூா் திமுக செயலா் விஜயகுமாா் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், விவசாயிகள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...