தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தகுதிச் சான்று இல்லாத 5 ஆட்டோக்கள் பறிமுதல்

கொடைரோடு பகுதியில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 ஆட்டோக்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:51 pm

Din

கொடைரோடு பகுதியில் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 ஆட்டோக்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆட்டோக்களில் நிா்ணயிக்கப்பட்டதை விட கூடுதலான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். குறிப்பாக பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் அழைத்துச் செல்லப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, போக்குவரத்து வட்டார பறக்கும் படை அதிகாரிகள் கொடைரோடு, அம்மையநாயக்கனூா் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அதிகமான எண்ணிக்கையில் பள்ளி மாணவா்களை ஏற்றி வந்த ஆட்டோக்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். இதில் 5 ஆட்டோக்களுக்கு தகுதிச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.