நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ப. உஷா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

ப.உஷா.

Updated On :10 அக்டோபர் 2024, 9:59 pm

Din

திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ப. உஷா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழகம் முழுவதும் 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதன்படி, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இரா. புண்ணியகோட்டி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ப. உஷா, திண்டுக்கல் மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ப. உஷா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலராக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.