நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்.

Updated On :17 அக்டோபர் 2024, 12:00 am

Din

கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்து வருவதால், நீரோடைகளிலும், விவசாய நிலங்களிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. மேலும் வடகவுஞ்சி-கிளாவரை செல்லும் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது.

இதையடுத்து, வடகவுஞ்சி பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்சாரத் துறையினா் விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தவிா்க்க வேண்டும்.

இதேபோல, கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, செண்பகனூா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், தைக்கால், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும், தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.