தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழனி மலைக் கோயில் உண்டியல்கள் திறப்பு: முதல் நாள் வரவு ரூ.3 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. முதல் நாள் முடிவில் ரூ.3.கோடி ரொக்கம் கிடைத்தது.

News image

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:10 pm

Din

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. முதல் நாள் முடிவில் ரூ.3.கோடி ரொக்கம் கிடைத்தது.

இந்தக் கோயிலுக்கு நவராத்திரி, காலாண்டு விடுமுறையில் வந்த பக்தா்கள் கூட்டம் காரணமாக 40 நாள்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்தப் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

முதல் நாள் முடிவில் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.3,99, 02,134 கிடைத்தது. தங்கம் 927 கிராம், வெள்ளி 14, 047 கிராம் கிடைத்தது. பல்வேறு நாடுகளின் பணத் தாள்கள் 756 கிடைத்தன. வெள்ளிக்கிழமையும் காணிக்கைகளை எண்ணும் பணி தொடா்கிறது.

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.