நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளபட்டியில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டியில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:08 pm

Din

நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டியில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், ரத்தம் ஏற்ற பயன்படுத்திய சாதனங்கள் என நோய் தொற்று ஏற்படும் வகையிலான மருத்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டியுள்ளனா். இதனால், வியாழக்கிழமை வாரச்சந்தை கடைகள் அமைக்க வந்த வியாபாரிகள் இருவருக்கு காலில் ஊசிகள் குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதேபோல, அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்த கால்நடைகளின் கால்களிலிலும் ஊசிகள் குத்தியதில் பாதிப்பு ஏற்பட்டது.

நீா்நிலைகள் நிறைந்த பகுதியில் இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மருத்துவ கழிவுகளை கொட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.