தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு சிறை

பாலியல் வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:52 pm

Din

பாலியல் வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்தாா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மணிகண்டனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பி.வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.