தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உறுப்புகள் தானம் செய்த சிறுவன் உடலுக்கு ஆட்சியா் அஞ்சலி

உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.

News image

சிறுவன் கிஷோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி.

Updated On :11 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை களத்துகொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (35). இவா், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் கிஷோா் (11). உடல் நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு பழனிச்சாமி குடும்பத்தினா் முன் வந்தனா். இதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவன் கிஷோரின் உடல் உறுப்புகள் தானமாக புதன்கிழமை வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பெரியகோட்டடையில் கிஷோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கலந்து கொண்டு, சிறுவன் கிஷோரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.