அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பண்ணையில் தீ விபத்து: 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.

News image
ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் சேதமடைந்த கோழிப்பண்ணை.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:22 pm

Din

ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 1,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாட்சியைச் சோ்ந்த ஹா்சவரதன். இவா் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் இவரது கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அவா் வளா்த்து வந்த 1,500-க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. மேலும், அங்கிருந்த உபகரணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் தீவிபத்து ஏற்பட்டதற்கு மின் கசிவே காரணம் எனத் தெரியவந்தது.