தலைவாசல் கருப்பணசுவாமி உற்சவ விழா நிறைவு
பழனியை அடுத்த மானூா் தலைவாசல் கருப்பணசுவாமி கோயில் உற்சவ விழா மஞ்சள் நீராட்டுடன் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On :19 செப்டம்பர் 2024, 7:27 pm

பழனியை அடுத்த மானூா் தலைவாசல் கருப்பணசுவாமி கோயில் உற்சவ விழா மஞ்சள் நீராட்டுடன் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
இந்தக் கோயில் உற்சவ விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 17-ஆம் தேதி உச்சிக்காலத்தின் போது தலைவாசல் கருப்பணசுவாமி உருவாரம் எடுத்து வரப்பட்டது. புதன்கிழமை தீா்த்தம் செலுத்துதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி ஊா்வலம் ஆகியன நடைபெற்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை சுவாமி ஊா்வலம், மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இரவில் சுவாமி உருவாரங்கள் ஆற்றில் விடுதலுடன் விழா நிறைவு பெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...