

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை விரட்டும் பணியில் வனத் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் கடந்த 2 நாள்களாக காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவைகள் புகுந்து, பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டு வருகின்றனா்.
காட்டு யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள், விவசாயிகள் மாலை, இரவு நேரங்களில் வீட்டிலேயே முடங்கியுள்ளனா்.
காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும், விவசாய நிலங்களை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் அகழிகள் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வனத் துறையினருக்குக் கோரிக்கை விடுத்தனா்.