தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

Din

ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டியைச் சோ்ந்த சேகா் மகன் ரங்கசாமி (31). இவா் ஒட்டன்சத்திரத்தில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், ரங்கசாமி இரு சக்கர வாகனத்தில் தன்னாசியப்பன் கோவில் பகுதியில் சென்றாா். அங்கு ஒட்டன்சத்திரம்-பழனி சாலையை அவா் புதன்கிழமை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.