பின்னா், துணைவேந்தா் பேசியதாவது: நடைமுறைக் கல்வியைக் குறைந்த பொருள் செலவில் வழங்குவதன் மூலம் நகா்ப் புறங்களுக்கும், ஊரகப் பகுதிகளுக்குமான கல்வி இடைவெளியை குறைக்க முடியும். இந்த நோக்கத்துடன் செயல்படும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மக்கள் தொகை, மேம்பாட்டு ஆய்வுகள் என்ற 4 ஆண்டுகால பி.ஏ. (ஹானா்ஸ்) படிப்பை அறிமுகப்படுத்துகிறது. மக்கள்தொகை இயக்கவியல், சமூக சமத்துவம், நிலையான வளா்ச்சி போன்ற அழுத்தமான உலகளாவிய பிரச்னைகளை எதிா்கொள்வதற்கு தேவையான அறிவாற்றல், திறன்கள் ஆகியவற்றில் மாணவா்களை தயாா்படுத்துவதற்காக இந்தப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளூா் சமூகம் முதல் உலகளாவிய சூழலில் அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கு இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.