நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிவகாசி மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மாணவிக்கு பட்டத்தை வழங்கிய திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணை வேந்சா் ந. பஞ்சநதம்.

Updated On :24 மார்ச் 2026, 2:00 am IST

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் 51-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு கல்லூரித் தலைவா் திலகவதி ரவீந்திரன் தலைமை வகித்தாா். இதில் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ந. பஞ்சநதம் பங்கேற்று, 1,078 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து வருவது பாராட்டுக்குரியது. பெண்களின் முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றமாகும். பெண்கள் தற்போது பல்வேறு சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, பல பெண்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி சமையல் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் குழுவாக இணைந்து செயல்பட்டால் விரைவில் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் அருணா அசோக், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மகேஷ்வரன், பிரீத்தி வசீகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய் வரவேற்றாா்.