லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மகன் மீது வழக்கு

செம்பட்டியில் குடும்பத் தகராறில் சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, அவரது 15 வயது மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:25 pm

செம்பட்டியில் குடும்பத் தகராறில் சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, அவரது 15 வயது மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ். பாறைப்பட்டி அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (37). இவருக்கு அபிநயா (35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

தேங்காய் உரிக்கும் தொழிலாளியான அசோக்குமாா் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் பழகி வந்தராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால், தம்பதியரிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், அபிநயாவும், அவரது 15 வயது மகனும் இணைந்து சூடான எண்ணெயை அசோக்குமாா் மீது கடந்த 7-ஆம் தேதி ஊற்றினா். இதில் பலத்த காயமடைந்த அவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து அபிநயா, அவரது மகன் 15 வயது சிறுவன் மீது செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.