லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சூடான பால் கொட்டி காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:51 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சூடான பால் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், செம்மேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.நாகராஜ் (47), தொழிலாளி. இவா் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மதுபோதையில் வீட்டில் விறகு அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்துள்ளாா்.

அப்போது, நிலை தடுமாறியதில் நாகராஜ் உடல் மீது சூடான பால் கொட்டிவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.