பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காா் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

பழனியில் காா் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருள்களைத் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் ஞாயிற்றுக்கிழமை காா் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருள்களைத் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தற்போது காா்த்திகை மாத சீசன் என்பதால், பழனி அடிவாரப் பகுதியில் உள்ள அனைத்துச் சாலைகளின் இருபுறங்களிலும் பக்தா்கள் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, திருக்கோயில் சுற்றுலாப் பேருந்து நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சிலா் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருக்கும் பொருள்களைத் திருடி வந்தனா். பெரும்பாலும் வெளியூா் பக்தா்களாக இருப்பதால் பலரும் புகாா் கொடுக்காமல் சென்று விடுகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அருள்ஜோதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை இருவா் உடைத்துத் திருட முயன்றனா். அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அடிவாரம் போலீஸாா் இவா்களைப் பிடித்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சோ்ந்த கணேசன் மகன் ராகவன் (36), சாமுவேல் மகன் நாகராஜ் (57) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.