பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றம்

Published on

வத்தலகுண்டு அருகேயுள்ள பழைய வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபம் புதன்கிழமை ஏற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவை அடுத்த பழைய வத்தலகுண்டுவில் அமைந்துள்ள மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பரமேஸ்வரி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், கோயிலில் உள்ள நந்தி சிலை முன்பு 1,008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டன. இதையடுத்து, கோயில் மகாமண்டபம், கோயில் வெளிப்புறங்களில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

பின்னா், கோயில் முன் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com