பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 3 போ் காயம்

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் 200-அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூரில் 200-அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி (34). இவா், தனது நண்பா்கள் விஜயன் (42), தினகரன்(40) ஆகியோருடன் கொடைக்கானலிலிருந்து மன்னவனூருக்கு மீட்பு வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

பொதுமக்கள் மூவரையும் மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், செல்லப்பாண்டி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.