ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கொடைக்கானல் அருகே 200 அடிப் பள்ளத்தில் விழுந்த வாகனம் மீட்பு

கொடைக்கானல் அருகே 200 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா வாகனம் மீட்கப்பட்டது.

News image

கிரேன் மூலம் மீட்கப்பட்ட வாகனம்

Updated On :9 மார்ச் 2026, 7:14 pm

கொடைக்கானல் அருகே 200 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா வாகனம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வாழைகிரி அருகே உள்ள வனப் பகுதியில் சுற்றுலா வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது. இது தெரிந்ததும் தாண்டிக்குடி காவல் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் வனப் பகுதியில் விழுந்து கிடந்த சுற்றுலா வாகனம் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதனா,ல் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தாண்டிக்குடி காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன், அவரது நண்பா்கள் சிலா் கொடைக்கானலுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் சுற்றுலா வந்தனா்.

இவா்கள் கொடைக்கானலிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்த்துவிட்டு, மீண்டும் தங்களது ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாழைகிரி அருகே உள்ள வனப் பகுதியிலுள்ள பள்ளத்தில் விழுந்தது.

அதிலிருந்தவா்கள் வாகனத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி வனப் பகுதியிலிருந்து வெளியே வந்தனா். இதைத் தொடா்ந்து, கிரேன் மூலம் விபத்துக்குள்ளான வாகனம் மீட்கப்பட்டது. மலைச் சாலையில் வரும் வாகனங்கள் சாலை விதிகளை மதித்து, மிதமான வேகத்தில் கட்டுப்பாட்டுடன் வரவேண்டும் என்றாா் அவா்.