விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு

நிலக்கோட்டை அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் 52-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிடா் கழகம் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை  அருகே உள்ள  சமத்துவபுரத்தில் பெரியாரின் 52-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிடா் கழகம் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்ட இளைஞரணித் தலைவா் சக்திசரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல் மைய மாவட்டச் செயலா் தமிழரசன், ஒன்றியப் பொறுப்பாளா்கள் கண்ணன்,  ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பழனி: தவெக சாா்பில் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனி பாலன், இணைச் செயலா் விஜய் சிவா, நகர செயலா் மிதுன் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.