நிலக்கோட்டை அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் 52-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிடா் கழகம் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மாவட்ட இளைஞரணித் தலைவா் சக்திசரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல் மைய மாவட்டச் செயலா் தமிழரசன், ஒன்றியப் பொறுப்பாளா்கள் கண்ணன், ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பழனி: தவெக சாா்பில் பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனி பாலன், இணைச் செயலா் விஜய் சிவா, நகர செயலா் மிதுன் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.