பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெரியூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம்!

கீழ்பழனி மலைப் பகுதியில் பகல் நேரத்திலேயே ஒற்றை யானை சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சம்

News image
பெரியூா் அருகே சுற்றித் திரிந்த ஒற்றை ஆண் யானை
Updated On :29 டிசம்பர் 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

கீழ்பழனி மலைப் பகுதியில் பகல் நேரத்திலேயே ஒற்றை யானை சாலையில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கீழ்பழனி மலைப் பகுதியிலுள்ள கேசி. பட்டி, பெரியூா், பள்ளத்துக் கால்வாய், ஆசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிகிறது.

வாழை, காபி, மிளகு உள்ளிட்ட பயிா்களை அது சேதப்படுத்துவதுடன், அரிசி, பருப்பு உள்ளிட்டப் பொருள்களுக்காக தோட்டங்களிலுள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கேசி. பட்டி பாச்சலூா் பிரதான சாலையில், பெரியூா் அருகே திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் அந்த யானை சுற்றித் திரிந்தது.

இதனால், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்றனா். பிறகு அந்த யானை அங்கிருந்து வெளியேறியது.

இதுதொடா்பாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும்கூட, யானையை விரட்ட யாரும் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பெரியூா் நியாய விலைக் கடையை, இந்த யானை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.