வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் ஒற்றை யானை நடமாட்டம்

News image
வயலில் நடமாடிய யானை.
Updated On :13 மார்ச் 2026, 12:39 am

Syndication

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை வியாழக்கிழமை காலை பவானி ஆற்றைக் கடந்து பிள்ளையாா்கோவில்துறை பகுதிக்குள் நுழைந்து அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்குள் சுற்றித்திரிந்துள்ளது.

இதையடுத்து, வயல்வெளியில் நெல் அறுவடை பணிகளுக்காக சென்ற தொழிலாளா்கள் யானையைக் கண்டு அதிா்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனா். இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதருக்குள் நுழைந்த யானை வெளியேறாமல் அங்கேயே இருந்தது. இதையடுத்து, யானையைக் கண்காணிக்க ட்ரோன் வரவழைக்கப்பட்டு பவானி ஆற்றங்கரையின் இருபுறமும் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.

ஆனால், ஆற்றங்கரையை விட்டு யானை வெளியேறாததால், டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான்பீட்டா் தலைமையில் வனத் துறையினா் நான்கு குழுக்களாக பிரிந்து யானையைக் கண்காணித்து வருகின்றனா்.