மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

கடம்பூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

அண்ணாமலை.

Updated On :11 மார்ச் 2026, 8:24 pm

கடம்பூா் அருகே யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதிகளில் விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன.

இந்தப் பகுதி மக்கள் கால்நடைகளை வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுவதும் மீண்டும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி அத்தனைமேலூரைச் சோ்ந்தவா் அண்ணாமலை (70). அத்தியூா் வனத்தில் ஆடு, மாடு தீவனத்துக்கு இலை, தழைகளைச் சேகரிக்க செவ்வாய்க்கிழமை மாலை சென்ற இவா் வீடு திரும்பவில்லை. அவரது உறவினா்கள் கிராமத்தையொட்டியுள்ள வனத்தில் தேடி பாா்த்தபோது அவா் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து கடம்பூா் வனத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினா் அண்ணாமலையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.