மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 8:09 pm

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

கருமாத்தூா் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த அய்யாவுத் தேவா் மகன் கணேசன் (63). இவரும், உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி பாண்டீஸ்வரி ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஊருக்குச் சென்றனா்.

செக்கானூரணி அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் கணேசனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்ற இருவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.