திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:13 pm

Din

திண்டுக்கல்லைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா்களின் வீடுகள், கடைகள் என 5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலை, கருப்பணசாமி கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தினகரன் குப்தா. இவரது மகன்கள் தினேஷ், தீரஜ். இவா்களுக்குச் சொந்தமான நகைக் கடைகள் திண்டுக்கல் மேற்கு ரத வீதி, ஆா்எஸ். சாலை, ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரை, திருச்சியைச் சோ்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோா் 6 காா்களில் திண்டுக்கல் வந்தனா். தினேஷ், தீரஜ் ஆகியோரின் வீடுகள், திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்திலுள்ள நகைக் கடைகள் என 5 இடங்களிலும் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சோதனை மேற்கொண்டனா்.

2 காா்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் நகைக் கடையில் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனை இரவு வரை நீடித்தது. தினேஷ், தீரஜ் குடும்பத்தினா் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நகைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைக் கடை உரிமையாளா்கள் கலக்கம்: ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் செந்தில்குமாா், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் நகைக் கடை நடத்தும் குழந்தைவேல், முருகன் ஆகியோரின் வீடுகள், நகைக் கடைகளில் கடந்த மாதம் வருமான வரித் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். 3 நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா்கள் தினேஷ், தீரஜ் ஆகியோரின் வீடு, கடைகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றிருப்பது நகைக் கடை உரிமையாளா்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image