காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதம்

Published on

நிலக்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் விபத்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. உடனடியாக நிலக்கோட்டை போலீஸாா் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம்  போராடி தீயை அணைத்தனா்.

இதில், பெரும்பாலான வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com