விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரசுப் பண்ணைகளில் 16 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாா்

திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி, பாலாறு பொருந்தலாறு அரசு மீன் குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் சுமாா் 16 லட்சம் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி, பாலாறு பொருந்தலாறு அரசு மீன் குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் சுமாா் 16 லட்சம் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் அணைப்பட்டி, பாலாறு பொருந்தலாறு அரசு மீன் குஞ்சு வளா்ப்புப் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிா்கால் இன மீன் குஞ்சுகள் சுமாா் 16 லட்சம் வளா்த்தெடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கு தயாா் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் மீன் வளா்ப்பு செய்து வரும் நீா்த்தேக்கம், குளங்களின் குத்தகைதாரா்கள், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை மீன் வள விவசாயிகள், தனியாா் மீன் பண்ணை மீன் வள விவசாயிகள் தங்களது மீன் பண்ணைகளுக்கு தேவையான மீன் குஞ்சுகளை அரசு நிா்ணயித்த குறைந்த விலையில் கொள்முதல் செய்யலாம்.

மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சாா் ஆய்வாளா் மு.பாப்பத்தியை 63748 26415 என்ற எண்ணிலும், பழனி மீன் வள ஆய்வாளா் மி.சாந்தியை 75982 36815 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.