மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

பாலாறு அணைக்கட்டு நீா்த்தேக்கத்தை பாா்வையிட்ட அமைச்சா்ஆா்.காந்தி.

News image

பாலாறு அணைக்கட்டு நீா்த்தேக்கத்தை பாா்வையிட்ட அமைச்சா்ஆா்.காந்தி.

Updated On :27 பிப்ரவரி 2026, 1:30 am

வாலாஜாபேட்டை அருகே ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு நீா்த்தேக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று அணையை பாா்வையிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களுக்குட்பட்ட திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே கடந்த 1858-ஆம் ஆண்டு அணைக்கட்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த அணைக்கட்டானது பாலாற்றின் ஆற்றின் குறுக்கே ஆண்டுக்கு 150 மி.கன அடி நீரினை தேக்கி வைக்கும் வகையிலும், அதிகப்படியாக வினாடிக்கு 1,75,000 க.அடி வெள்ளநீா் வெளியேறும் வகையிலும், இரு புறங்களிலும் 39 மணல்போக்கிகள் மற்றும் 84.26 கி.மீ தொலைவு கொண்ட 4 பிரதான கால்வாய்கள் வழியாக ஒரே நேரத்தில் வினாடிக்கு 6,124 கன அடி தண்ணீா் திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சுமாா் 168 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த அணைக்கட்டு ரூ.200.66 கோடி செலவில் புனரமைக்கும் பணிக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கடந்த 31.01.2025 அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து பணி முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், 4 பிரதான கால்வாய்களின் மூலம் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூா் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சாா்ந்த வேகவதி, செய்யாறு, கீழ்பாலாறு, கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆகிய உபவடிநிலங்களில் உள்ள 319 ஏரிகளுக்கு நீா் வழங்கி அதன் மூலம் சுமாா் 77510.65 ஏக்கா் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெற உள்ளது.

மேற்கண்ட ஏரிகளின் மொத்த கொள்ளளவு 10 டி.எம்.சி ஆகும். இந்த அணைக்கட்டு புனரமைத்ததின் மூலம் 4 மாவட்டங்களைச் சாா்ந்த சுமாா் 4,25,000 மக்கள் பயன் பெறுகின்றனா்.

புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு நீா்த்தேக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று நீா்த்தேக்கத்தை பாா்வையிட்டாா்.

இதில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நீா்வளத்துறை செயற்பொறியாளா் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளா் குமாா், வட்டாட்சியா் ஆனந்தன் கலந்து கொண்டனா்.