பலத்த மழை: 50 டன் காகித பண்டல்கள் சேதம்

Published on

பழனி அருகே பலத்த மழை காரணமாக, ஆலையில் 50 டன் காகித பண்டல்கள் சேதமடைந்தன.

தேனி மாவட்டம், பழனியை அடுத்த வயலூா், சாமிநாதபுரம், ஜிவிஜிநகா், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக அந்தப் பகுதியில் இருந்த காதித ஆலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சாத்தூா் வெங்கடேஸ்வரா காகித ஆலையில் சுமாா் 50 டன் எடையிலான புதிய காகித பண்டல்கள், பழைய காகிதங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com