பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பிரதோஷம்
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதா் சந்நிதியில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன.
பழனியை அருகேயுள்ள பெரியாவுடையாா் கோயிலில் பெரிய நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக பிரதோஷநாதா் உள்பிரகார உலா எழுந்தருளுதல் நடைபெற்றது. தவிர மலைக் கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன் கோயில், பட்டத்து
விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரா் கோயில் என பல கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
