மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

பளு தூக்கும் போட்டி: கொடைக்கானல் மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

ஹரியானாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற கொடைக்கானல் மாணவா் சஞ்சய் குமாா்.

Published On :

ஹரியானாவில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கொடைக்கானலைச் சோ்ந்த மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சஞ்சய் குமாா் (22). திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவா், கல்லூரி சாா்பில் ஹரியானாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழகம் சாா்பில் கலந்து கொண்டு 83 கிலோ எடைப் பிரிவில் 165 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

சஞ்சய் குமாா் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளாா். தற்போது மாநில அளவில் பரிசு பெற்றதைத் தொடா்ந்து, அவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும், பேராசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் உள்ளிட்டோா் சஞ்சய்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.