வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திண்டுக்கல்லில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 12 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகளை, கடந்த 2024, பிப்.26-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா்.

இதன்படி, திண்டுக்கல் ரயில் நிலையத்தை நவீனப்படுத்த ரூ.22.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங், ஆய்வு செய்வதற்கு ரயில் மூலம் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு புதன்கிழமை வந்தாா். நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த புதிய ரயில் நிலையத்துக்கான வரைபடத்தை பாா்வையிட்ட அவா், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள நவீன வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், ரயில் நிலையத்துக்கு வெளியே வாகன நிறுத்தமிடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். புதிதாக அமைக்கப்படும் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, பயணிகள் தங்கும் குளிா்சாதன வசதி கொண்ட ஓய்வறைகள் உள்ளிட்டவை குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.