வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பழனியில் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு மாணவா்கள் தோ்வு

பழனியில் தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள், தேசிய அளவிலான யோகாசன போட்டிகளுக்கான மாணவ, மாணவிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யோகாசன போட்டிகளில் சோழா உலக சாதனை தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்ற மாணவ, மாணவிகள்.
Updated On :29 நவம்பர் 2025, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள், தேசிய அளவிலான யோகாசன போட்டிகளுக்கான மாணவ, மாணவிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் பழனி சிவாலயா யோகா மையம், தேசிய யோகாசனம் சங்கம் சாா்பில், தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள், கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான யோகாசன போட்டிகளுக்கான மாணவ, மாணவிகள் தோ்வு நடைபெற்றன.

போட்டிகளை பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா். பழனி கோயில் அரிமா சங்கத் தலைவா் ஜெயப்பிரகாஷ், காயத்ரி ஆறுமுகம், அரிமா சுந்தரம், ஒப்பந்தகாரா் நேரு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இந்தப் போட்டிகளில் பழனி, உடுமலை, கோவை, தாராபுரம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது யோகாசன திறமைகளை வெளிப்படுத்தினா்.

சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சிரசாசனம், அஞ்சராசனம், யோக முத்திரா, சோமாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை பள்ளி மாணவ, மாணவிகள் செய்து காண்பித்தனா். தனித்திறன் சாதனை, ரிதம் யோகா, சாம்பியன் ஆப் சாம்பியன் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

திண்டுக்கல் அமிா்தா வித்யாலயா, ஒட்டன்சத்திரம் கல்வி பள்ளி, ஸ்ரீராமபுரம் விவிதா பள்ளி, தொப்பம்பட்டி சந்திரன் பள்ளி மாணவா்கள் தனிப் பிரிவுகளில் சாதனை படைத்து வெற்றி பெற்றனா். முன்னதாக, சோழா சாதனை புத்தகத்துக்கான உலக சாதனை போட்டியில் 10-க்கும் மேற்பட்டோா் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்தனா். அவா்களுக்கு சோழா சாதனை புத்தகம் சாா்பில் பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, சிவாலய யோகா மைய இயக்குநா் சிவக்குமாா் வரவேற்றாா்.