பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை (டிச.1) குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை (டிச.1) குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்று லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கோபுரங்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, நந்தவனம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதற்கான யாக சாலை கோயில் முன் அமைக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தும்பிக்கையாழ்வாா் வழிபாட்டுடன் முதல்கால வேள்வி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காலபூஜை, மூன்றாம் காலபூஜையும், திங்கள்கிழமை நான்காம் கால பூஜை நடத்தப்பட்டு, காலை 6.30 மணிக்கு மேல் கோபுரக் கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணியம், அதிகாரிகள், அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.