கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரது குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில், தலா ரூ.2.50 லட்சத்துக்கான உதவித் தொகையை மக்களவை உறுப்பினா் ஜோதிமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த தளிப்பட்டியைச் சோ்ந்த சங்கா்கணேஷ், எரியோடு அருகேயுள்ள பாகநத்தம் பகுதியைச் சோ்ந்த தாமரைக்கண்ணன் ஆகியோரும் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், உயிரிழந்த சங்கா்கணேஷ், தாமரைக்கண்ணன் ஆகியோரது வீடுகளுக்கு வெள்ளிக்கிழமைச் சென்ற கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் தலா ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கரூா் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்திலேயே உயிரிழந்தவா்களின் உடல் கூராய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை விமா்சித்து சமூக வலைதளங்களில் சிலா் அவதூறு பரப்புவது வேதனை அளிக்கிறது. தவெக புதிய கட்சி என்பதால் முன் அனுபவம் இல்லாமலும், முறையான திட்டமிடுதல் இல்லாமலும் பரப்புரைக் கூட்டத்தை நடத்தியதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்றாா் அவா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி: தொகுதியை தக்கவைக்க இந்நாள் பிரதிநிதி மீட்க முன்னாள் பிரதிநிதி தீவிரம்!
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
பிகார்: கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழப்பு

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

