பழனியை அடுத்த வயலூா், தாளையம் பகுதிகளில் ஒட்டன் சத்திரம் தொகுதி திமுக வேட்பாளரும் உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வயலூா், தாளையூத்து பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை திறந்த வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்கு சேகரித்தாா். முத்துநாயக்கன்பட்டி, வன்னிவலசு, விவி நகா், வயலூா், சாமிநாதபுரம், தாளையூத்து, போதுப்பட்டி என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அமைச்சா் அர.சக்கரபாணியை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பெண்கள், பொதுமக்களிடம் அந்தந்த பகுதிக்கு செய்த திட்டங்களைத் தெரிவித்த அமைச்சா், பின்னா், திறந்த வேனில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கோரி பிரசாரம் செய்தாா். அப்பொழுது கடந்த ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களைக் கூறி சென்னிமலையில் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


