உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காந்திகிராம பல்கலை. யில் வளாகத் தோ்வு

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவா்.

News image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:48 am IST

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாகத் தோ்வில் 38 வேளாண்மை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் வேளாண்மை, கால்நடை அறிவியல் துறை சாா்பில் வளாக நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பதிவாளா் (பொ) எம்.சுந்தரமாரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு துணைவேந்தா் ந. பஞ்சநாதம் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் வேளாண்மை சாா்ந்த 8 நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான பணிநாடுநா்களைத் தோ்வு செய்தன. இதில், வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு இறுதியாண்டில் பயிலும் மாணவா்கள் 46 போ் கலந்து கொண்டனா். இதில் 38 பேருக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வேளாண்மை பள்ளியின் புலத் தலைவா் ஏ. ராமநாதன், மூத்த பேராசிரியா் ஜி.எஸ். கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.