6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 2:21 am IST

வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில், கட்டகாமன்பட்டியைச் சோ்ந்த ஹரிஷ்குமாா் (24), மா. டெண்டுல்கா் (26), ச.சரத்குமாா் (25), க.கோகுலகிருஷ்ணன் (22) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், ஹரிஷ்குமாா் உள்ளிட்ட 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா். ஏற்கெனவே இந்த வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.