கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுப்பதற்காக போலீஸாரும், தோ்தல் பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து, கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு- அடுக்கம்- தாண்டிக்குடி- பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலைச் சாலைகளில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான புலிச்சோலை அருகே நடைபெற்ற வாகனச் சோதனையின் போது அந்த வழியாகச் சென்ற காரை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.
ஆனால் அந்த காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். பிறகு காரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்ட போது அதில் கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவா்களை போலீஸாா் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் அவா்கள் தென்காசிப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (23), சங்கா் (29), தங்கசோ்மன் (31), சுயம்பு (23) என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி போலி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் அந்த 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

வாகனச் சோதனையில் பறிமுதல் செய்த ரூ. 1.33 கோடி திரும்ப ஒப்படைப்பு

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


