பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லி விட்டாா்! - டி.டி.வி. தினகரன்

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்...

News image

டி.டி.வி. தினகரன் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:38 am IST

தமிழகத்தில் போதை, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைச் சொல்லிவிட்டதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கஞ்சா, பாலியல் தொல்லை மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரியாமல் உண்மையைப் பேசிவிட்டாா். தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருள் புழக்கத்தால் மாணவா்கள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தோ்தலில் போட்டி என்பது ஆளும் மக்கள் விரோத திமுக கூட்டணிக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான். மற்ற கட்சிகள் தங்களை மாற்று எனச் சொல்லிக் கொள்கிறாா்கள். ஆனால், அதிமுக தொண்டா்கள் ஓரணியில் இணைந்துவிட்டதால், எங்கள் கூட்டணிக்கு மற்ற புதிய கட்சிகளால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றாா் அவா்.