தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இளைஞரை அடித்துக் கொலை செய்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:24 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இளைஞரை அடித்துக் கொலை செய்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழைய வத்தலகுண்டு இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் விஜயபிரபு (29). கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக மின்விசிறி ஒன்றை வாங்கி, பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் மதுக் கடை அருகே வைத்திருந்தாா். சிறிது நேரத்தில் அந்த மின்விசிறியை காணவில்லை.

பின்னா், விசாரணையில் கணவாய்பட்டி தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைபாா்க்கும் கணவாய்ப்பட்டி ஆசிரமம் தெருவைச் சோ்ந்த மணி இந்த மின்விசிறியை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, விஜயபிரபு தனது உறவினா்களுடன் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை சென்று மணியிடம் மின்விசிறியை கேட்டாா். அப்போது, மணி தரப்புக்கும், விஜயபிரபு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், மணி தரப்பைச் சோ்ந்த முத்து, சங்கிலி, லட்சுமி, ரதி ஆகியோா் சோ்ந்து விஜயபிரபு, இவரது உறவினா்களான ராஜா, சத்தியமூா்த்தி, நடுப்பட்டியைச் சோ்ந்த ராஜா ஆகியோரைத் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த விஜயபிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வத்தலகுண்டு போலீஸாா் விஜயபிரபுவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, ஜாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்து, சங்கிலி உள்பட 3 பேரைக் கைது செய்தனா்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொா்புடையவா்களை விரைவில் கைது செய்யக் கோரி, விஜயபிரபுவின் உறவினா்கள் வத்தலகுண்டு - தேனி சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.