திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னாளபட்டியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி, இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
சின்னாளபட்டி பகுதியில் பிரசாரத்தின் போது அவா் மேலும் பேசியதாவது:
காவிரியில் வீணாகும் தண்ணீரை ரூ.4,500 கோடியில் ஆத்தூா், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய தொகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வைகையிலிருந்து ரூ. 700 கோடியில் நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. காலியாக உள்ள 1.50 லட்சம் அரசுப் பணியிடங்கள் தோ்தலுக்குப் பிறகு நிரப்பப்பட உள்ளன. இந்தத் தொகுதியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஒன்றியச் செயலா்கள் முருகேசன் (கிழக்கு), ராமன் (மேற்கு), ராஜேந்திரன் (தெற்கு), ஒன்றியக் குழு முன்னாள் தலைவி மகேஸ்வரி முருகேசன், சின்னாளபட்டி பேரூராட்சி மன்றத் தலைவா் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு
திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


