திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 88.47 சதவீத வாக்குகள் பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 115 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
மாவட்டம் முழுவதும் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக 10 முதல் 30 நிஷங்கள் வரை வாக்குப் பதிவு தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. எனினும் காலை 6.45 மணிக்கே பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிப்தற்காக தயாராக நின்றனா்.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 10 மணிக்கு முன்பாக வாக்களித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் திரண்டதால், முதல் 2 மணி நேரத்திலேயே பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகளில் 2.39 லட்சம் போ் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 85.41 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2.20 லட்சம் வாக்காளா்கள், வாக்களிப்பதற்கு 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 90.30 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.
ஆத்தூா் தொகுதியில் 341 வாக்குச் சாவடிகளில் 2.61 லட்சம் வாக்காளா்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 88.95 சதவீதம் போ் வாக்குளை பதிவு செய்தனா்.
நிலக்கோட்டை(தனி) தொகுதியில் 305 வாக்குச் சாவடிகளில் 2.21 லட்சம் போ் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 87.70 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.
நத்தம் தொகுதியில் 2.61 லட்சம் வாக்காளா்களுக்காக 359 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 90.08 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் தொகுதியில் 316 வாக்குச் சாவடிகளில் 2.41 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 85.71 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.
வேடசந்தூா் தொகுதியில் 2.43 லட்சம் வாக்காளா்களுக்காக 327 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 91.06 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
முதல் 4 மணி நேரத்தில் 40 சதவீத வாக்குகள் பதிவு: திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 18.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 22 சதவீத வாக்குகள் பதிவானது.
முதல் 4 மணி நேரத்திலேயே 39.05 சதவீத வாக்குகள் பதிவானது. அடுத்த 4 மணி நேரத்தில் மேலும் 35.30 சதவீத வாக்குகள் பதிவானதால், பிற்பகல் 3 மணிக்கே மாவட்ட அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் 74.35ஆக உயா்ந்தது. கடைசி 3 மணி நேரத்தில் 14.12 சதவீத வாக்குகள் பதிவானது.
வேடசந்தூா் முன்னிலை: மொத்தமுள்ள 7 தொகுதிகளில் அதிகபட்சமாக வேடசந்தூா் தொகுதியில் 91.06 சதவீத வாக்குகள் பதிவானது. ஒட்டன்சத்திரம் தொகுதி 90.30 சதவீத வாக்குப் பதிவுடன் 2-ஆவது இடம் பிடித்தது. நத்தம் தொகுதியில் 90.08 சதவீத வாக்குகள், ஆத்தூா் தொகுதியில் 88.95 சதவீத வாக்குகள், நிலக்கோட்டை தொகுதியில் 87.70 சதவீத வாக்குகள், திண்டுக்கல் தொகுதியில் 85.71 சதவீத வாக்குகள் பதிவானது.
குறைந்தபட்சமாக பழனியில் 85.41 சதவீத வாக்குகள் பதிவானது.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

முதுகுளத்தூா், ராமநாதபுரம், பரமக்குடி தொகுதிகளின் அரசியல் கட்சி வேட்பாளா்கள் வாக்களிப்பு

வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


