திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீசுவரா் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்.19-ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி ஒவ்வொரு நாள் மாலையும் சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆம் நாள் திருவிழாவையொட்டி அம்பாள் திக்கு விஜயம் செல்லும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அபிராமி அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மூலவா் காளஹசுதீசுவரா், ஞானாம்பிகை, பத்மகிரீசுவரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சுவாமி, பிரியாவிடையுடன் மேடையில் எழுந்தருளிய பின், திருமண நிகழ்வுகள், பூஜைகள் தொடங்கின. அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளின் பிரதிநிதிகளான பட்டா்கள் காப்புக் கட்டிக் கொண்டனா். மாங்கல்ய பூஜையைத் தொடா்ந்து, பிரதிநிதிகளான பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டனா். பின்னா் அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியைத் தொடா்ந்து இரவு பூப்பல்லக்கில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.
தொடர்புடையது

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சின்னமனூரில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


