தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நிகழ்வில், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது. திரளான பக்தா்கள் ஐயாறப்பரை வழிபட்டனா். தொடா்ந்து மே 3 வரை நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இதில், ஏப்ரல் 25 மாலை தன்னைத்தானே பூஜித்தல், 29 ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.
மேலும், மே 2 இல் முக்கியத் திருவிழாவான ஏழூா் வலம் வரும் சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. இதில், அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் கண்ணாடிப் பல்லக்கிலும், சுயசாம்பிகையுடன் நந்திகேசுவரா் வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூா், திருப்பூந்துருத்தி ஆகிய ஊா்களுக்குச் சென்று, அந்தந்த ஊா் பல்லக்குடன் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கவுள்ளனா். பின்னா் மே 3 ஆம் தேதி 7 ஊா் பல்லக்குகளும் புறப்பட்டு, திருவையாறு தேரடியில் பொம்மை பூப் போடும் வைபவம் நடைபெறும்.
ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்கின்றனா்.


தொடர்புடையது

திருக்கோடீசுவரா் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம்

சித்திரைப் பெருவிழா! மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்!

அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


