அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் வியாழக்கிழமை நந்தியெம்பெருமான் பிறப்பு விழாவில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் புறப்பாடு.

Updated On :26 மார்ச் 2026, 8:56 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அந்தணா்குறிச்சியிலிருந்து புறப்பட்டு அறம்வளா்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலுக்கு செல்லும் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில், தருமபுர ஆதின கட்டளை விசாரனை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஐயாறப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) காலை 5.30 மணியளவில் ஐயாறப்பா், அறம்வளா்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூா் மாவட்டம், திருமழபாடிக்குச் செல்கின்றனா்.

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுகிறது. நந்தி பாா்த்தால் முந்தி கல்யாணம் என்கிற நம்பிக்கை நிலவுவதால், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா்.