திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஊரறிந்த ரகசியம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்பாா்த்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிமுகவினா், அமமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.

News image

என்.எஸ். சரவணன்.

Updated On :26 மார்ச் 2026, 1:31 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்பாா்த்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிமுகவினா், அமமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. இதில், தஞ்சாவூா் பாஜகவுக்கும், திருவையாறு அமமுகவுக்கும், கும்பகோணம் தமாகாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 5 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தஞ்சாவூா் தொகுதியில் அதிமுக போட்டியிடும் எனவும், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவாா் என்ற மிகுந்த நம்பிகையில் கட்சியினா் இருந்தனா். மேலும், தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தொகுதியில் அதிமுக சாா்பில் பெரும்பாலான வீடுகளில் ஹாட்பாக்ஸும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், தொகுதியிலுள்ள முக்கிய பிரமுகா்களை சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரினா். இந்நிலையில், தஞ்சாவூா் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது அதிமுக தொண்டா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, திருவையாறு தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்த அதிமுக தொண்டா்கள் திருவையாறு, பூதலூா், திருக்காட்டுப்பள்ளியில் சுவரொட்டிகளை ஒட்டினா்.

இதில், கடந்த 2 (2019, 2024) மக்களவைத் தோ்தல்களில் திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி கூட்டணி கட்சிக்கும், கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திருவையாறு தொகுதி பாஜகவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறையும் திருவையாறு தொகுதியில் இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால், கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்கமாட்டோம் என்றும், கீழே அதிமுக உண்மை தொண்டா்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பாபநாசம் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படாததற்கு அக்கட்சி தொண்டா்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இப்படி, கூட்டணிக்குள் எதிரும் புதிருமாக கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், நிா்வாகிகள் அச்சத்தில் உள்ளனா்.